அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
ஓட்ஸ் 

பதப்படுத்துதல் : ஓட்ஸ் பதப்படுத்துதல் மிக எளிமையான  முறையில் செய்யப்படுகிறது. 

சுத்தம் செய்தல் மற்றும் தரம் பிரித்தல் : அரைவை செய்யும் முன்பு தானியத்தை கல்குப்பை மற்றும் வேறு பொருட்கள் ஏதும் இருப்பின் எல்லாவற்றையும் நீக்கி சுத்தப்படுத்தப்படுகிறது. 

மேல்புற ஒடு நீக்குதல் : சுழற்சி முறையில் ஒட்ஸின் மேல்புற தோல் உட்புறப்பகுதியில் இருந்து பிரிக்கப்படுகிறது.  திருகையில் இட்டு நடுப்புறத்தில் இட்டு சுழற்சியில் ஒரு தனியாகவும், உட்புறம் தனியாகவும் பிரிகிறது. உட்புறம் எடை அதிகம் உள்ளதால் காற்றில் தூற்றும் போது மேற்புறத்தோல் தனியாக பிரிந்து விடும்.

வறுத்தல் : ஓட்ஸ் உட்பகுதியானது அதன் ஈரப்பதத்தை சமன் செய்ய நீர் சேர்த்து சூடு செய்யப்படுகிறது. ஓட்ஸ் உட்பகுதி அதிக அளவு கொழுப்பு சத்தை கொண்டுள்ளது.  இது மேலோடு நீக்கும் போது ஆசிட் ஆக இதிலுள்ள கொழுப்பு உடைவதால் கெட்டு போன வாடை ஏற்படுகிறது.  உடைக்கப்பட்ட ஓட்ஸானது 4 நாட்களுக்கு மேல் இவ்வாடை ஏற்படுகிறது.  எனவே இது வறுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.  வறுக்கப்பட்ட ஓட்ஸ் முளை வருவதில்லை.

ஒரே அளவுடைய ஓட்ஸாக பிரித்தல் : ஓட்ஸானது அதன் தன்மை மற்றும் அளவு கொண்டு ஐந்து வகைகளாக வலை, பிரிப்பான்கள் கொண்டு ஒரே அளவாக பிரிக்கப்படுகிறது. கலனை உடனே திறக்கும்போது தானியமானது பெரிதாகிறது.  உள்ளே உள்ள நீராவியானது ஓட்ஸ் உறிஞ்சி அதன் அளவை போல் பல மடங்கு பெரிதாகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
ஓட்ஸ் பதார்த்தங்கள் 
: இவை காலை சிற்றுண்டியாகவும், அடுமனை பொருட்கள் தயாரிப்பில் உள்ளே நிரப்பும் பொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது. 

ஓட்ஸ் குரோட்ஸ் : மேல் தோல் நீக்கப்பட்ட ஒட்ஸ் பகுதியானது சிறந்த காலை நேர உணவாக பயன்படுகிறது. 

தோல் நீக்கப்பட்ட ஓட்ஸ் துண்டுகளாக்குதல் : ஓட்ஸ் இரண்டு அல்லது  மூன்று துண்டுகளாக துண்டு செய்யப்பட்டு வேக வைக்கப்படுகிறது.  இதை ஸ்காட்ச் ஒட்ஸ் என்றழைக்கப்படுகிறது.  இது வழவழப்பு தன்மையாக இருக்கிறது. 

உருட்டப்பட்ட ஓட்ஸ் : தோல் நீக்கப்பட்ட ஓட்ஸ் ஆவியில் வேக வைக்கப்பட்டு பெரிய உருளைகளினால் தட்டையாக்கப்படுகிறது.  இது 15 நிமிடங்களில் வேகும் தன்மை கொண்டுள்ளது. 

விரைவாக வேகும் தன்மை கொண்ட ஓட்ஸ் : தோல் நீக்கப்பட்ட  ஓட்ஸானது சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு ஆவிசியல் வேக வைக்கப்பட்டு உருளைகளினால் உருட்டப்பட்டு அவல் ஆக்கப்படுகிறது.  இது வேக வைக்க ஐந்து நிமிடம் ஆகிறது. 

உடனடி ஓட்ஸ் : உடைத்த ஓட்ஸானது வேக வைக்கப்பட்டு காய வைத்து பின்பு தட்டையாக்கப்படுகிறது.  வேக வைக்கப்படுவதால் ஓட்ஸானது மென்மையாகிறது.  இதனுடன் நீர் சேர்த்து இந்த கலவை அடுமனை பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015